Listen Songs Online


Visitor Information

Search This Blog

என்னவளுக்கு அர்ப்பணம்-2

நீ படிக்கும்
கவிதையாக‌
வாழ முடியவில்லை..
So...
உன்னைப் பற்றி
கவிதை எழுதி
வாழ்கிறேன்....
-----------------------------------------
ஒவ்வொரு துடிப்புக்கும்
இடையே கிடைக்கும்
மிகச்சிறிய இடைவெளியில்
இதயம் ஓய்வெடுத்துக்கொள்ளும்.
ஆனால்,
அந்த இடைவெளியிலும்
என் இதயம்
உன்னையே காதலிக்கும்...
----------------------------------------
சுறா மீன்
நீந்திக்கொண்டே இருக்காவிட்டால்
இறந்துவிடும்...
உன்னை
காதலித்துக்கொண்டே இருக்காவிட்டால்
நானும் அப்படியே.
----------------------------------------
ஒரு ஆண்.
வீரனா
கோழையா
என்பது,
பெண்ணின் கண்ணைப் பார்த்து
அவன் காதலை சொல்வதிலேயே
அழுத்தமாய் தெரிந்து விடுகிறது....
----------------------------------------
ஒரு ஆண்
கண்களின் மூலம்
காதலில் நுழைகிறான்...
ஒரு பெண்ணோ
காதுகளின் மூலம்
காதலில் விழுகிறாள்...
ஆணுக்கு காதல் என்பது,
ஒரு அத்தியாயம் மட்டுமே..
ஆனால் பெண்ணுக்கோ,
காதல் ஒரு வரலாறு...
---------------------------------------
தூங்கி எழுந்து
காலையில் வாசலைப் பார்க்கையில்,
சத்தமில்லாமல் மழை பெய்ந்து முடித்திருக்கும்...
அதைப் போலவே
மிக அழகாக என்னுள் நீ நுழைந்தாய்.
காதலாக....
---------------------------------------
உன்னிடம்
நண்பன் பேசுகையில்
மிக நன்றாகவே உணர்கிறேன்.
அவன் காதலியிடம்
நான் சிரித்துப் பேசுகையில்,
அவனுக்கு ஏற்பட்ட‌
சொல்ல முடியாத தவிப்பு.....
---------------------------------------
ஒரு
குழந்தையைப் பார்க்க வைத்துக்கொண்டு
மிட்டாய் சாப்பிடுவதைப் போல் உள்ளது.
என்னைப் பார்க்க வைத்துக்கொண்டு
நீ அனைவருடனும் பேசுவது...
----------------------------------------
சற்று முன்
அவள் கடந்து போன வீதி
எந்தச் சலனமும் இல்லாமல்
அப்படியே இருக்கிறது...
ஆனால்,
அதிவேக ரயிலொன்று
கடந்து போன தண்டவாளம் போல்
அதிர்கிறது என் இதயம்....
--------------------------------------
Piano'வில்
விழுந்த பூனையைப் போல‌
எழுதத் தெரியாவிட்டாலும்
பலரை
கவிஞனாக்கி விடுகிறது,
காதல்.....
---------------------------------
தங்கத்தின் மதிப்பு
லண்டனிலும்,
வைரத்தின் மதிப்பு
நெதர்லாந்திலும்,
பிளாட்டினத்தின் மதிப்பு
நியூயார்க்கிலும்
கணக்கிடப்படுகிறது..
என்னைப் பொறுத்தவரை
இந்த மூன்றுமே
மதிப்பிடப் படுவது,
உன் கழுத்தில் தான்....
------------------------------------
ஒரு
யானையின்
ஆயுட்காலம் முழுவதும்
அதன் தந்தம்
வளர்ந்துகொண்டே இருக்குமாம்...
அது போல‌
நம் வாழ்நாள் முழுவதும்
வளர்ந்துகொண்டே இருக்கும்,
உன் அழகும்
என் காதலும்....
----------------------------------
பிறை நிலவும்,
முழு நிலவானது..!
உன் நகம் சேர்த்து....
------------------------------------
எப்போதாவது உன்னிடம்
ஏதாவது நான் கேட்பது,
கேட்டதை பெற வேண்டும்
என்பதற்காக அல்ல...
'ம்ஹூம்' என்று
உதடு பிதுக்கி
சிணுங்கல் கவிதை
வாசிப்பாயே...
அதை ரசிக்கத்தான்.....!
------------------------------------

Related Posts with Thumbnails

Find Mobile Operator

Please enter the  10 digit Indian mobile number to trace

+91

Find Vehicle Details

Please enter the Vehicle number to trace

            XX      YY  ZZZZZ   eg. UP-16 A5427

 -

                                                                       XX- First two Alphabets.

                                                                       YY- Next two Characters.

                                                                       ZZZZZ-Rest of the characters.

 

Language Translator