என் உயிர் தோழி
***********************
எப்படியோ வாழ்ந்திருப்பேன் ....
உன்னை சந்திக்காமல் இருந்திருந்தால் ... ஆனால்
"நீ இப்படித்தான் வாழவேண்டும்" என்று என் வாழ்க்கையை தீர்மானித்தவள் நீ தான்...
அதற்கு உறுதுணையாக நின்றவளும் நீ தான்...
உன் ஆசை தீர்மானத்திற்கு இணங்க
என் வாழ்க்கையை நான் மாற்றிக்கொண்டேன் ....
இப்போது நல்ல நிலையிலும் இருக்கிறேன் உன் விருப்பப்படி...
ஆனால்.....
அதை ரசிக்கத்தான் நீ இப்போது என்னுடன் இல்லை....
இந்த பிரிவு நமக்கு தேவையா.....?
நீயே சொல் ... என் உயிர் தோழி ...
உன் நினைவு
*******************
யாரோ சொன்னார்கள் ,
" சந்தோஷமாக இருக்கும்போது நீ நேசிப்பவளை நினைப்பாய்...
சோகமாக இருக்கும்போது உன்னை நேசிப்பவளை நினைப்பாய் ..."
என்று... ஆனால் எனக்கோ
சந்தோசமாக இருந்தாலும் சோகமாக இருந்தாலும்
"என்றும் உன் நினைவு " மட்டும் தான் ....
காரணம்....
நான் நேசிப்பவளும் நீ தான்.....
நீயே சொல்
*****************
எனக்கும் எல்லா உறவுகளும் இருக்கிறார்கள் ...
என் தாய் தந்தை ....
சகோதரி...
அண்ணன் தம்பி....
நண்பர்கள்....
தோழிகள்....
ஆனால் உன்னை மட்டும் இந்த உறவுகளில் சேர்த்த மனம் வரவில்லை ...
நீயே சொல்லடி... உனக்கும் எனக்கும் இருக்கும்
இந்த இனிய உறவுக்கு பெயர் என்ன....?
பிரிந்து விடுவோம்
*******************
நீ
எதை சொன்னாலும்
அப்பிடியே
நம்பிவிடும் மூடன் நான்,
என்று தெரிந்துதான் சொன்னாயோ..?
இதயத்தில்..
இரக்கமில்லாத...
கொடூரமான...
அந்த
"பிரிந்து விடுவோம்" என்ற
வார்த்தையை..??
என் அன்பே
என் செவிகள் கேட்கின்றன,
எப்பொழுது எனக்கு விடுதலை என்று,
ஏனென்றால் உன் குரல் கேட்காமல்,
பேசாமல் என்னை கொல்வதைவிட,
பேசும் உன் வார்த்தைகளால் என்னை கொன்றுவிடு.
பேச மறுப்பதேன்:-
************************************
நாடி நரம்புகளை
இணைத்திடுவேன்...!
வண்ண சிதறல்களை
மாலையை
உனக்கு கோர்த்திட ..!
பார்வை நரம்புகளை
இணைத்திடுவேன்...!
பாச சிதறல்களை
மாலையை
உனக்கு கோர்த்திட..!
இதய நரம்புகளை
இணைத்திடுவேன்...!
இயற்க்கை சிதறல்களை
மாலையை
உனக்கு கோர்த்திட..!
அனைத்தும் நான்
உனக்காக செய்யும் போது
நீ மட்டும் என்னிடம்
பேச மறுப்பதேன்...??
வித்தியாசம் என்ன?
****************************
வானவில்லையும்
திரும்பி பார்க்க வைக்கும்
வர்ணகலவையே..?
நீ
கோபமாய் பார்த்தால்...
சுட்டெரிக்கும்
சூரியனுக்கும்..
உனக்கும்..
அதிக வித்தியாசமில்லை ..?
நீ
பிரியமாய் கொடுக்க ஆரம்பித்தால்...
கர்ணனுக்கும்...
காதலி
உனக்கும்...
அதிக வித்தியாசமில்லை ..?
எதற்கு
**********************
உன் தலைக்கு ஏறாத பூக்கள்
என் வீட்டு தோட்டத்தில் எதற்கு????
உன் கை சேராத
என் கைகளில் ஆயுள் ரேகை எதற்கு????
நீ சுவாசிக்காத காற்று
நான் சுவாசிக்க எதற்கு????
தெரியாமல்தான் கேட்கிறேன்
நீ விரும்பாத நான் மட்டும் எதற்கு????
நிஜமும் நிழலும்
**************************
நீ நிஜம்..!
நான் நிழல்..!
வெறுத்தாலும்..,
விரும்பினாலும்..,
உடன்தான் வரும் ..
நிஜத்தோடு நிழல்..!
காரணம்
நிஜம் இன்றி..,
நிழல் இல்லை...!!
நீ இன்றி நானும் இல்லை...!!
என்னவளுக்கு அர்ப்பணம்-1
Subscribe to:
Posts (Atom)
Find Mobile Operator
Find Vehicle Details
XX YY ZZZZZ eg. UP-16 A5427
XX- First two Alphabets.
YY- Next two Characters.
ZZZZZ-Rest of the characters.