கண்கள் கலங்கினாலும்
---------------------------------
கண்கள் கலங்கினாலும் கனவுகள்
கலைவதில்லை
உதடுகள் சிரித்தாலும் உள்ளம்
சிரிப்பதில்லை
கண்மணி உன் மனதில் நான் இல்லாவிட்டலும்
என் மனதில் நீயே வாழ்கிறாய்
♥ காதல்♥
---------------------------------
"இதயமாக உள்ள உன்னை ஒரு
கவிதையாக வரைய தொடங்கினால்
எத்தனை புத்தகம் வேண்டும் என்று
எனக்கு தெரியாது
அதனால் தான் பெண்னே!
கவிதை தலைப்பிற்கு பதிலாக
உன் பெயரை எழுதி
என்னையும் ஒரு கவிஞ்சனாக மாற்றிக்கொண்டேன்"......♥ ♥ ♥
காத்திருக்கிறேன் ...
---------------------------------
நீ கேட்டதும் கொடுத்து விடலாம் என்றே,
இன்னும், என்னிடமே வைத்திருக்கிறேன்...
என் மனதை ,,
உன்னாலும் முடியாது
---------------------------------
என்னுள் நிறைந்து இருக்கும் உன்னை
யாராலும் பிரிக்க முடியாது..
ஏன் நீயே நினைத்தாலும் கூட...
உன் முடிவு
---------------------------------
நான் சொல்லிய வார்த்தைகளால்
நீ துடித்ததை நான் அறிந்தேன்,
உன் துடிப்பில் தான்
என் இதயமும் துடித்துக்கொண்டே இருக்கிறது...
என்னால் உணர முடிந்த
அந்த வார்த்தைகளுக்கு உன்னால் முடிவு கிடைக்கும்.....
கிறுக்கனானேன்
--------------------------------
அன்று அவள் பார்வையால்
என்
இதயத்தில்
கிறுக்கி சென்றாள்
நான்
இன்று
பேப்பரில்
கிறுக்குகிறேன்
SMS
--------------------------------
நானோ...
உனக்கு குறுஞ்செய்தி அனுப்பும்
இடைவெளியில்
கொஞ்சம் வேலை செய்வேன்..
நீயோ...
உன் வேலைகளுக்கு இடையே
என் குறுஞ்செய்திகளை படித்துகூட
பார்க்காமல் மொத்தமாய்
அழிப்பாய்..?!
ஏன் மெளனம்
-------------------------------
உனக்கு தினமும்
நான் நூறு குறுஞ்செய்தி அனுப்புவது
ஒரு சாதனையே அல்ல...
ஆனால் அதில் நீ ஒன்றுக்கு கூட
பதில் அனுப்பாமல்
மௌனம் சாதிப்பாயே...
அதுதான் பெரிய சாதனை..?!
கடந்து சென்றாள்
--------------------------------
அவள் என்னை கடந்து போனபோது
கொஞ்சம் நான் கலைந்து போனேன் ....
சற்றே திரும்பி ஓரக்கண்ணால்
ஒரு முறை பார்த்தபோது
முற்றிலும் நான் தொலைந்து போனேன் !!
உன்னால் தானே நான் வாழ்கிறேன்
--------------------------------
என் அன்பும் நீ
என் அறிவும் நீ
என் பண்பும் நீ
என் பாசமும் நீ
என் வாழ்வும் நீ
என் வலியும் நீ
என் சோகமும் நீ
என் சொந்தமும் நீ
என் கனவும் நீ
என் கண்ணீரும் நீ
என் உணர்வும் நீ
என் உறக்கமும் நீ
என் நினைவும் நீ
என் நிழலும் நீ
என் குரலும் நீ
என் கோபமும் நீ
என் சரிரம் நீ
என் சாரிரமும் நீ
என் சிந்தையும் நீ
என் சிரிப்பும் நீ
( இப்படி எல்லாமே நீ இருப்பதால் தானோ
நான் இன்னமும் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.)
எனதல்ல என் கவிதைகள்
--------------------------------
எனதல்ல என் கவிதைகள் .....
என்னவளின்
கண் மொழி,
சைகை மொழி,
பேச்சு மொழி,
இன்னும்
எங்களுக்குள்ளான,
நிறைய ரகசிய
மொழிகளின்
அரைகுறையான
மொழி பெயர்ப்புகளே
என் கவிதைகள்...!!
என்னவளுக்கு அர்ப்பணம் - 4
Subscribe to:
Posts (Atom)
Find Mobile Operator
Find Vehicle Details
XX YY ZZZZZ eg. UP-16 A5427
XX- First two Alphabets.
YY- Next two Characters.
ZZZZZ-Rest of the characters.