முடியவே முடியாது...!
இரவுகள் பல
இறந்து கொண்டிருக்க...!
பெண்ணே உன்
நினைவில் நானும்
இறந்து கொண்டிருக்க...!
முடியவே முடியாது
என்ற வார்த்தை மட்டும்
உன் இதழ்களிலிருந்து
தெறிக்க...!
முடியவில்லை என்னால்
இந்த உலகில்
இருந்து இறக்க...!
காதல் ராவணன்
"நான் சந்தித்து நகையாடிய முதல் பெண் நீ என்று பொய்உர மாட்டான், ஆனால் நகையடியத்தில் முதர்மையான பெண் நீயா என்பேன்",
"உன்னோடு வாழ இரண்டு ஆயுள் தா என்றேன், இரக்கம் இல்லை இறைவனுக்கு, இரண்டு ஆண்டுகளே கொடுத்தான்,
ஆனால் என்று இரண்டு ஆயிரம் ஆண்டுகள் வாழும் நினைவுகளை என்னுள் நிலை நிறுத்தினாய்",
"உன்னை சிறை எடுக்க ராவணன் அல்ல, அதனால் தான் உண் நினைவுகளை சிறை எடுக்க என் சிந்தனைகளுக்கு சிறகு கொடுத்தேன், என் இதயம் என்னும் இருட்டறையில் யாரும் காண வண்ணம் அடைக்க"
----------------------------------------
உன் மௌனங்களை மொழிபெயர்க்கிறேன்
ஆனாலும் என் வார்த்தைகள்
தற்கொலை செய்துகொள்கின்றன,
என் காதலை
என் தேவதையிடம்
சொல்ல வரும் போது...
தெரிந்தும் தெரியாமலும்
----------------------------------------
வீதியில் போகும் பலூன்காரனை
வேடிக்கை பார்க்கும் குழந்தையைப்போல்
வேடிக்கை பார்க்கிறேன்
என்னைக்கடந்து போகும்
காதல் ஜோடிகளை ........
யாரோ உன் பெயர் சொல்லி
அழைக்கையில்
திரும்பிப் பார்க்கிறேன்
நீ அங்கு இல்லையென்று
தெரிந்தும் கூட! ..
ராட்ஷசி
---------------------------------------
உன் நட்பும்
உன் நட்பின் பாதிப்பும்
வாழ்நாள் முழுதும்
என்னோடு நடை போடும்!!!
உன்னால் அனுபவிக்கும்
தனிமையின் வலியை
உனக்கும் தர மனமில்லை
அதனால் அனுப்புகிறேன்
உனக்கு துணையாய்
என் கவிதைகளை.........
நேரில் மட்டும்
வெட்கப்படும் தேவதை நீ!
மறைமுகமாய்
இம்சை செய்யும் ராட்ஷசி நீ!
நினைவுகள்
---------------------------------------
நான் காதலித்த அவளை
மறக்க முயலவில்லை
இறக்க துணிந்தேன்
நான் இறந்து
என்னுடன் சேர்த்து அவள் நினைவையும்
இழக்க விரும்பவில்லை
ஆதலால் மட்டும்
வாழ்ந்து வருகிறேன் - அவள் நினைவுகளோடு
ஒரு நடை பிணமாக!!!
உன் பிரிவை விட. . .
---------------------------------------
நீ பிரியும்
தருணத்தில் வழியனுப்ப
மனமில்லாமல்
பேசுவதற்கு வார்த்தைகள்
இல்லாமல்
நான் தவித்து நின்றேன்.
கன்னம் நனைக்கும்
கண்ணீருடன் நீ
சொன்னாய்.
"உனக்கு வர்ற
மனைவி கொடுத்துவச்சவடா"
என்று.
உன் பிரிவை விட
அதிகமாய்
வலிக்கிறது
உன் வாழ்த்து.
ஆனந்தகண்ணீர்
----------------------------------------
அவள்...
காதலை தான் தரவில்லை
கவிதையை தந்தாளே
என்று நினைத்த போது
விழிகளின் ஓரத்தில்
கண்ணீர் வடிந்தது!
நான் கற்ற பாடம்
----------------------------------------
கவிதை
நீ கற்றுத்தந்த பாடம்...
உன் மௌனத்தை
மொழி பெயர்த்தேன்
எல்லோரும் என்னை
கவிஞனென்றார்கள்...
உண்மையில் நானொரு
மொழிபெயர்ப்பாளன்
என்பது எனக்கு உனக்கும்
மட்டுமே தெரிந்த உண்மை..
காதல் தமிழ்உரை
----------------------------------------
எத்தனையோ முறை
நீ கேட்டு விடுவாயோ என்று
பக்க பக்கமாக
பதில் தயாரித்து வருவேன்
அத்தனை முறையும
நீ என் பெயரைக் கேட்டால் கூட
விடை தெரியாமல்
விழிப்பேன்…
உன் பார்வை என்னும்
காந்த அலையில்
என் மூளை நரம்புகள்
முடக்கப்படுவது
இயற்கை தானே...?
கோனார் தமிழ்
உரை போல
காதலுக்கும் ஒரு
வழி காட்டியிருதிருந்தால்
அதுவாவது என் காதலுக்கு
ஒளி காட்டியாக
இருந்திருக்கும்
ஒரே பதில்
-----------------------------------------
என் கேள்விகள்
எத்தனைப்பக்கங்களானாலும்
உன் பதில் என்னவோ
மௌனம் கலந்த ஒரு
புன்னகை தான்...
அத்தனை கேள்விகளும் உன்
ஒரு அங்குல புன்னகை
முன் மண்டியிடும் மர்மமென்ன...?
வாழ்வாய் நலமுடன் ...!
போகும் என்று -எனக்கு
தெரியும் -ஆனால்
நீயும் போவாய் என்று -நான்
நிணைக்கவில்லை....!
எனக்கு என்
வலிகளுக்கு விடை
கொடுத்தவள் நீ.....!
இன்று எனக்கும் நீ
விடை கொடுக்கும் காலம்
இருந்தும் உன் மீது -எனக்கு
துளியும் கோபமில்லை ....!
உன் நிலை நான்
அறிவேன் -உன்
மனதும் நான் அறிவேன் ..!
இப்போதும் சொல்கின்றேன் -நீ
எப்போதும் வாழ்வாய் நலமுடன் ...!